முகத்தில் உள்ள குழியை போக்க இலகுவழி

தற்போது மாறிவரும் வாழ்கை முறையால் உடலில் பல பிரச்சனைகள் வருகின்றது. தற்போது அவசரமான இந்த கால கட்டத்தில் சரும அழகை பராமரிக்க முடியவில்லை.

இதற்காக சருமத்திற்கு பல கெமிக்கல் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் முகத்தில் முகப்பரு, முகத்தில் குழி போன்ற பிரச்சனைகள் வரும். இந்த பொருட்களினால் உண்டாகும் அழகு நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்காது.

முகத்தில் குழி பருக்கள் சுருக்கம் வருவதற்கான காரணம் முகம் அதன் ஆரோக்கியத்தை இழப்பது தான். முகத்தின் ஆரோக்கியத்தை எப்படி மறுபடியும் கொண்டு வரலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முகப்பிரச்சனைகளை தீர்க்கும் வழிகள்
எல்லோரது வீட்டிலும் தேன் என்பது இருக்கும். தேனில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது இயற்கையாக சருமத்தை ஈருப்பதமாக வைத்திருக்க உதவும். தேனை நேரடியாக முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்தால் தழும்புகள் நீங்கும்.

தினமும் தேன் தடவியதன் பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள துளைகள் நீங்கும். கடற்பாசி சரமத்தின் அழகிற்கு பயன்படுத்தும் ஒரு பொருளாகும்.

இது சருமத்தை மென்மையாக வைத்திருக்கும். இந்த கடற்பாசியுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்யவும்.

அதை உங்கள் முகத்தில் தடவி உலர விடவும். 20 நிமிடம் கழித்து கழுவவும். இது சருமத்தில் காணப்படும் துளைகளை நீக்க பயன்படும். தக்காளி சாறு வீட்டில் எளிதாக கிடைக்ககூடிய ஒரு பொருளாகும்.

இது தோலை பாதுகாப்பாக வைத்திருக்கும். இதில் லைகோபீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது முகத்தை பொலிவாகவும் கண்ணாடிபோலும் வைத்திருக்கும்.