நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில் உள்ள தற்காலிக விடுதியில் தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் 16 பங்களாதேஷ் பிரஜைகளும், 2 பாகிஸ்தான் பிரஜைகளும், 2 புருண்டி பிரஜைகளும் இந்தியா, பிலிப்பைன்ஸ், உகண்டா, எத்தியோப்பியா, கென்யா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.