மெக்சிகோ, கனடாவுக்கு கூடுதல் வரி விதித்தால், உறவு பாதிக்கும் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் டிரம்புக்கு அறிவுறுத்தி உள்ளார்.
வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில், கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய 3 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கான ஆணையில் கையெழுத்துவிடுவேன் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து, நிருபர்கள் சந்திப்பில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: மெக்சிகோ மற்றும் கனடா மீதான கூடுதல் வரி விதிப்பு முறையை, டொனால்டு டிரம்ப் மறுபரிசீலனை செய்வார் என நான் நம்புகிறேன். இது நட்பு நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும். இதனால் பாதிப்பு வரும் என்று நான் நினைக்கிறேன்.
அமெரிக்காவில் அசாதாரண சூழ்நிலை உள்ளது. பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் இரண்டு நட்பு நாடுகளால் சூழப்பட்டுள்ளோம். நாம் செய்ய வேண்டியது, மெக்சிகோ, கனடா நாடுகளுடன் நமது உறவை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.