நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கியுள்ள நிலையில் கடந்த மாதம் விக்ரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அதையடுத்து தற்போது வினோத் இயக்கும் தனது 69 வது படத்தில் நடித்து வரும் விஜய், விரைவில் தமிழகம் முழுக்க சூறாவளி பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டு வருகிறார். இந்த நிலையில் விஜய் கட்சியை அறிவித்த பிறகு நடிகர்கள் சவுந்தர்ராஜா, தாடி பாலாஜி அவரது கட்சியில் இணைந்த நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த பொன்வேலும் தற்போது விஜய் கட்சியில் இணைந்திருக்கிறார். பொன்வேல் தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் முன்னிலையில் விஜய் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.