பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதற்கு பெஞ்சல் என பெயர் சூட்டப்பட்டது. இது, மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் கணித்து இருந்தது.இது மெதுவாக கரையை நோக்கி நகர்ந்து வந்தது.
நேற்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மாலை 5: 30 கரையை கடக்க துவங்கிய புயல் டிசம்பர் 1 அதிகாலை 1 மணியளவில் முழுமையாக கரை கடந்தது. புயல் கரை கடந்தாலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்ட நிலையில், இரவு 10 மணி வரையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
கனமழைபுயல் கரையை கடக்க துவங்கிய நேரத்தில் விழுப்புரம், கடலூரில் கனமழை பெய்தது.