இந்த நடிகருடன் நடிக்கவே முடியாது.. ஆக்ஷன் கிங் கூறியவர் யார் தெரியுமா?

நடிகர் அர்ஜுன் ஆக்ஷன் கிங் என அழைக்கும் அளவுக்கு எக்கச்சக்க படங்களில் ஆக்ஷனில் மிரட்டியவர். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.

விஜய்யின் லியோ படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் வலம் வருகிறார்.

தற்போது, அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் கவுட்ண்டர்களின் மன்னன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் காமெடி கிங் கவுண்டமணி குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

யார் பாருங்க

அதில், “ஜெய்ஹிந்த் படத்தின் காமெடி காட்சிகளை எழுதிவிட்டு, அந்த காட்சிகளை கவுண்டமணியுடன் சேர்ந்து நடிக்கும் போது, என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தேன்.

அதனால் உடனே கேமரா முன் இருந்து வெளியே வந்து சிரிப்பு அடங்கிய பின் தான் நடிக்கவே தொடங்கினேன். இது போன்ற ஒரு சூழலில் நான் மட்டுமின்றி பல நடிகர்கள் கடந்து இருப்பார்கள்.

கவுண்டமணி போன்ற காமெடி கிங் நடிக்கும் போது அவருடன் இணைந்து நடிப்பது மிகவும் கடினமான விஷயம் தான்” என்று கூறியுள்ளார்.