நடிகர் சூரியின் சொத்து மதிப்பு

நடிகர் சூரியின் சொத்து மதிப்பு மற்றும் அவரின் சம்பள விவரம் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி

1977-ம் ஆண்டு மதுரை பிறந்த ராமன், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் என்பதால் தன்னுடைய பெயரை சூரி என மாற்றிக் கொண்டு சினிமா வாய்ப்பிற்கான சென்னை வந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் யாருக்கும் அவ்வளவு எளிதில் வாய்ப்புகள் கிடைத்துவிடாது. அப்படி தான் சூரிக்கும் பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

ஆரம்ப காலங்களில் வாய்ப்பு தேடி பல அலுவலங்களுக்கு அழைந்த பின்னர் வயிற்று பிழைப்பிற்காக சசினிமாவில் செட் அமைக்கும் பணிகளை செய்து வந்தார். அந்த சமயத்தில் லிங்குசாமி தயாரிக்கும் படங்களில் வாய்ப்பு வழங்கி வந்தார்.

பின்னர் ஒருநாள் சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படம் சூரிக்கு தனி அடையாளத்தை உருவாக்கி விஜய், அஜித். சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. டாப் காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்த சூரி விடுதலை படத்தின் மூலம் கதாநாயகராக மாறி விட்டார்.

சொத்து மதிப்பு விவரங்கள்

இந்த நிலையில் நடிகர் சூரியின் சம்பளம் மற்றும் சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் சூரி, சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் கொடுகட்டிப் பறந்து வருகிறார். மதுரையில் அம்மன் உணவகம் என்கிற பெயரில் ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. அந்த பிசினஸை அவரது சகோதரர்கள் கவனித்து வருகிறார்கள்.

அத்துடன் சினிமாவில் நடிக்க ஒரு படத்திற்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். பிஎம்டபிள்யூ, இனோவா போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார் என்றும் தற்போது ரூ.70 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

“அன்று சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர் இன்று இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?” என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்க்ள.