பொதுவாக சிலருக்கு திடீரென ஹீமோகுளோபின் குறைபாட்டு பிரச்சினை வரும். இதனை சில அறிகுறிகள் வைத்து நாம் கண்டறியலாம்.
உடலில் உள்ள ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்படும் பொழுது தலைசுற்றல், உடல் நடுக்கம், மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்படும்.
ரத்த சிவப்பணுக்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் வேலையை செய்கின்றது. இதில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் ஹீமோகுளோபின் அளவு பாதிக்கப்படும்.
ஹீமோகுளோபின் அளவு குறைபாட்டு பிரச்சினை காலப்போக்கில் புற்றுநோய் மற்றும் அனீமியா ஆகிய நோய்களையும் ஏற்படுத்தலாம்.
அந்த வகையில், ஹீமோகுளோபின் அளவு ஏன் குறைக்கிறது? அதனை எப்படி சரிச் செய்யலாம்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைய காரணம்
1. உடலில் போதியளவு ரத்தச்சிவப்பணுக்கள் உற்பத்தியாகவிட்டால் ஹீமோகுளோபின் அளவு குறைபாட்டு பிரச்சினை ஏற்படும். அத்துடன் உடல் எலும்பு மஜ்ஜைகளில் இருந்து உடல் ரத்த சிவப்பணுக்களையும், வெள்ளை அணுக்களையும் உற்பத்தி செய்யும்.
2. சில சமயங்களில் உடலில் இருக்கும் எலும்பு மஜ்ஜைகள், போதிய ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டால் உடலில் ரத்த சிவப்பணுக்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
3. உடலுக்கு தேவையான அளவு ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி செய்யும். சில நேரங்களில் அது தானாகவே அழிந்து விடுகிறது. மீண்டும் உற்பத்தி செய்வதற்கு இணையாக அது உடலில் இருக்க முடியாமல் போவதால் ரத்த சிவப்பணுக்கள் குறையும்.
4. வைட்டமின் பி12, பி9 மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் உடலுக்கு போதியளவு கிடைக்காவிட்டால் ரத்தசிவப்பணுக்கள் குறையலாம்.
5. உடலுக்குள் ரத்தப்போக்கு ஏற்பட்டால் ஹீமோகுளோபின் அளவில் மாற்றம் ஏற்படலாம். இதனை ரத்த அல்சர் என்றும் அழைப்பார்கள்.
ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் பானங்கள்
பீட்ரூட் சாறு
கீரை ஸ்மூத்தி
மாதுளை பழச்சாறு
கேரட் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு
பேரிட்சை பழ மில்க் ஷேக்
தர்ப்பூசணி பழச்சாறு
நெல்லிச்சாறு