இளவயதில் முடி கொட்டும் பிரச்சினையை தீர்க்க!

முடி கொட்டும் பிரச்சனை இன்றைய இளைஞர்கள் அதிகமாக சந்தித்து வரும் பிரச்சனையாக இருக்கின்றது.

இன்றைய காலத்தில் முடி உதிர்வு வயது வித்தியாசம் இல்லாமல் ஏற்படுகின்றது. வயது ஆன பின்பு முடி கொட்டுதல், நரைமுடி பிரச்சனைகள் ஏற்படும்.

ஆனால் தற்போதைய காலத்தில் இளைய தலைமுறையினர் இடையே இந்த பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றது.

இளம் வயதில் முடி உதிர்விற்கான காரணம் பெரும்பாலான நபர்களுக்கு தெரிந்திருப்பதில்லை. இதற்கான பொதுவாக காரணம் என்ன என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளதை தெரிந்து கொள்வோம்.

இளம் வயதில் முடி உதிர்வு
இளம் வயதில் முடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது மன அழுத்தம். அதிக மன அழுத்தமானது உடலில் கார்டிசோலின் அளவை அதிகரிக்கின்றது. இவை தலைமுடியை சேதப்படுத்துகின்றது.

தற்போதைய காலத்தில் இளைஞர்கள் உண்ணும் துரித உணவுகளும் இந்த முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறான நொறுக்குத் தீனிகள் புரதத்தைக் குறைப்பதுடன், கார்போஹைட்ரேட்டை அதிகரிக்கின்றது. இந்த உணவானது உடலில் வீக்கத்தை ஏற்படுத்துவதுடன், வெப்பநிலையை அதிகரித்து முடி உதிர்வை அதிகரிக்கின்றது.

ஸ்கால்ப் சொரியாசிஸ் அல்லது ஹெவி டான்ட்ரஃப் போன்ற ஸ்கால்ப் நோய்களும் இளம் வயதிலேயே பொடுகு ஏற்படுவதற்கும், இதனால் முடி உதிர்வு பிரச்சனையும் ஏற்படுகின்றது.

அதிக புகைப்பிடிப்பவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மெலிந்த முடி உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

அலோபீசியா அரேட்டா ஊட்டச்சத்து குறைபாடு அல்லது மருந்து பயன்பாடு போன்ற மருத்துவ பிரச்சனையின் விளைவாகவும் முடி உதிர்வு ஏற்படலாம்.

சரியான தூக்கம், சரியான உணவு, சரியான உடற்பயிற்சி முடி உதிர்வை தடுக்கின்றது.