ஜேசன் சஞ்சய்
ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்துவரும் நடிகர் விஜய்யின் மகன்.
இவர் சினிமாவில் நாயகயாக களமிறங்குவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்க்க எனது வழி தனி வழி என யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் இவர் படம் இயக்குகிறார் என தகவல் எப்போதோ வெளியான நிலையில் சமீபத்தில் தான் படத்தின் நாயகன் அறிவிப்பு வந்தது.
சம்பளம்
ஜேசன் சஞ்சய் தனது முதல் பட நாயகனை நீண்ட மாதங்களாக தேடி வந்த நிலையில் சந்தீப் கிஷான் கமிட்டாகியுள்ளார். இந்த அறிவிப்பு கூட சமீபத்தில் தான் வெளியானது, அதோடு இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது முதல் படத்திற்காக ஜேசன் சஞ்சய் வாங்கும் சம்பளம் என ஒரு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதாவது நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்திற்காக ரூ. 10 கோடி சம்பளம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.