இயக்குனர் பாலாவிற்கு விழா

இயக்குனர் பாலா தமிழில் கடந்த 1999ம் ஆண்டு டிச. 10ந் தேதி அன்று வெளிவந்த ‘சேது’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி உள்ளிட்ட தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தார். பாலாவின் தோல்வி படங்களில் கூட பாலாவின் மேக்கிங் ரசிகர்களைக் கவர்ந்தது.

தற்போது நடிகர் அருண் விஜயை வைத்து ‘வணங்கான்’ படத்தை இயக்கியுள்ளார் . இப்படம் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது. இதனால் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை வருகின்ற டிசம்பர் 18ம் தேதி அன்று நடத்த இப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டமிட்டுள்ளார். கூடுதலாக இந்த நிகழ்வோடு பாலா திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆவதால் அதற்கும் சேர்த்து விழா எடுக்க உள்ளதாகவும், இந்த விழாவில் பங்கேற்க பல முக்கிய நட்சத்திரங்களை அழைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.