என்றும் இல்லாத அளவிற்கு உயர்வடைந்த பிட்காயின் மதிப்பு!

பிட்காயினின் மதிப்பு கிரிப்டோகரன்சியின் வரலாற்றில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று (05) உயர்ந்துள்ளது. இதன்படி பிட்காயினின் மதிப்பு 1,00,000 அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பிட்காயினின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு பிட்காயின் மதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளதுடன், ட்ரம்பின் வெற்றிக்குப் பிறகு 4 வாரங்களில் 45% உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.