இளம் சிவப்பு நிற கொய்யாபழம் குணமாக்கும் நோய்கள் தெரிந்து கொள்ளுங்கள்

பொதுவாக பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் முக்கிய பொருளாகவும் பார்க்கப்படுகின்றது.

அனைவராலும் விரும்பி சாப்பிடக் கூடிய கொய்யாப்பழத்தில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன.

அத்துடன் சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. நூறு கிராம் கொய்யாவில் சுமார் முந்நூறு மில்லி கிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது வைட்டமின்-சி உள்ளது.

இப்படி தன்னுள் ஏகப்பட்ட சத்துக்களை வைத்திருக்கும் கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

இளம் சிவப்பு கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன பலன்?

1. உயர் இரத்த அழுத்தம் பிரச்சினையுள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடலாம். ஏனெனின் கொய்யாப்பழத்தில் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

2. நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் குறையும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் இதயம் சார்ந்த நோய்கள் வராது.

3. நார்ச்சத்து கொண்ட கொய்யா பழத்துக்கு இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைக்கும் ஆற்றல் உள்ளது. ஏனெனின் கொய்யாப்பழங்களில் கிளைசெமிக் குறியீடு குறைவு.

4. வைட்டமின் சி நிறைந்த கொய்யாப்பழம் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை அடிக்கடி சாப்பிடும் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.

5. தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்கள் காரணமாக அவஸ்தைப்படுவார்கள். இவர்கள் தன்னிடம் இருக்கும் மலச்சிக்கலை கட்டுக்குள் கொண்டு வர கொய்யாப்பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம். இது செரிமானப் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்.

6. வைட்டமின்கள் நிறைந்த இளம்சிவப்பு நிற கொய்யாப்பழம் அடிக்கடி சாப்பிட்டால் மூளை ஆரோக்கியம் மேம்படும்.

7. இளம் சிவப்பு நிறத்தில் உள்ள கொய்யா பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கும். இது நமது வயதான தோற்றத்தை மாற்றி பளபளப்பான சருமத்தை கொடுக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.