பிரான்சிற்கு புதிய பிரதமர்

அடுத்த சில நாட்களில் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவார் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் மைக்கேல் பார்னியர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேவேளை பிரான்ஸ் ஜனாதிபதி மைக்கேல் பார்னியரை அந்நாட்டின் பிரதமராக நியமித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்படி, 1962ஆம் ஆண்டுக்குப் பிறகு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசு கவிழ்வது இதுவே முதல்முறை. எனினும், 2027 ஆம் ஆண்டு வரை தான் பதவியில் நீடிப்பார் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், மிஷேல் பார்னியர் பிரதமராக இருந்த குறுகிய காலத்திலேயே அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்காக பிரான்ஸ் ஜனாதிபதி முன்னாள் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.