தயிருடன் இந்த பொருளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள்!

தயிரை இந்த ஒரு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் அதிக பிரச்சனை வரும் என்பதையும், அவை என்னென்ன என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பால் மற்றும் பால் பொருட்கள் ஆரோக்கியத்தில் மிகவும் நன்மை பயக்கும் நிலையில், இதனை சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்குமாம்.

தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும், செரிமானத் மேம்படுத்தவும் செய்கின்றது.

தயிரில் இருக்கும் கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது தவிர, தயிர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

நெய் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டு வந்தால் பல நோய்களையும் எதிர்த்து போராட உதவுகிறது.

தயிர் உடம்பிற்கு குளிர்ச்சியை அளிக்கும் நிலையில், நெய் உடலுக்கு வெப்பத்தை அளிக்கின்றது. எனவே இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஏன் சேர்த்து சாப்பிடக்கூடாது?
நெய்யில் செய்த பரோட்டாவை தயிரில் தொட்டு சாப்பிட்டால், வயிறு உப்புசம் மற்றும் வாயு பிரச்சனையை ஏற்படுத்துகின்றது. இவற்றினை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் ஜீரணிப்பதில் சிக்கல் ஏற்படுகின்றது.

செரிமான கோளாறுகள், உயர் கொலஸ்ட்ரால் அளவு, இதய நோய், தோல் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றது.

தயிருடன் எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி போன்ற பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். தயிருடன் பாலாடை கட்டி மற்றும் பாகற்காயை சேர்த்து சாப்பிடக்கூடாது.

ஆயுர்வேதத்தின் படி, தயிர் மற்றும் முலாம்பழம், மற்றும் தர்பூசணி ஒன்றாக சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.