நடிகை சமந்தாவும், தெலுங்கு வாரிசு நடிகரான நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டதும், சில வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விவாகரத்து செய்து கொண்டதும் பழைய கதை. அதன்பிறகு சில வருடங்கள் இருவரும் அமைதியாக இருந்தாலும் நடிகர் நாகசைதன்யா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை ஷோபிதா துலிபாலாவுடன் காதலில் விழுந்தார். ஆரம்பத்தில் கிசுகிசுப்பாக பேசப்பட்டு வந்த இந்த விஷயம் பின்னர் நிஜமாகி சமீபத்தில் இவர்களது திருமணமும் நடைபெற்று முடிந்தது.
திருமண தினத்தன்று அவரது முன்னாள் மனைவி சமந்தாவின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்று தான் பலரும் எதிர்பார்த்தார்கள். அவரும் இவர்களைப் பற்றி குறிப்பிடாமல் அதே சமயம் மறைமுகமாக மணப்பெண் ஷோபிதாவுக்கு அறிவுரை சொல்லும் விதமாக “ஒரு பெண் போல சண்டை செய்” என்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியிருந்தார். இதுவே ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தற்போது அவர் தனது நட்பு வட்டாரங்களுடன் பார்ட்டி ஒன்றில் சமந்தா கலந்து கொண்ட வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமந்தாவே இந்த பார்ட்டியில் கலந்து கொண்டது குறித்து கூறும்போது, “மிகவும் அழகான ஒரு மாலை பொழுதாக அது இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் நாகசைதன்யாவின் இரண்டாவது திருமணத்தை சமந்தா எந்த கவலையும் இன்றி அலட்சியமாகக் கடந்து செல்கிறார் என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.