மனைவி பிரியாவுக்கு அட்லியின் பிறந்தநாள் வாழ்த்து

இயக்குனர் அட்லி, நடிகை பிரியா இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த ஆண்டு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மேலும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காதபோதும் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தை தயாரித்துள்ளார் பிரியா அட்லி.

இந்த நிலையில் நேற்று பிரியா அட்லி தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு போட்டு உள்ளார் அட்லி. அந்த பதிவில், அருமை பாப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ என்னுடைய மகள், அன்பு எல்லாமே. நீ இல்லை என்றால் அது முழுமை பெறாது. என்னுடைய பலம், வெற்றி, கவுரவம், அன்பு, எல்லாமே நீ தான். உனது பாய்ஸ்களிடமிருந்து உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். நீதான் எங்கள் உலகம். உன்னை பெருமைப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் அட்லி. அதோடு மனைவி பிரியாவுக்கு தான் முத்தம் கொடுக்கும் ஒரு புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் அட்லி .