பிரான்சில் ஜந்து ஆண்டுகளின் பின்னர் திறக்கப்பட்ட தேவாலயம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக திறக்கப்பட உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு குறித்த தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சுமார் 750 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டு இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த தேவாலய திறப்பு விழாவில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல உலகத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.