தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்குத் திசையை நோக்கி நகரக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.
அத்துடன், அந்த கடற்பரப்புகளில் காற்று, மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, குறித்த பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 10 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.