அரிசி ஆலைகளில் விசேட சோதனை!

பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்போது, அரிசி ஆலைகளில் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவு, தற்போது இருப்பு உள்ள அளவு மற்றும் சந்தைக்கு வெளியிடப்படும் அரிசியின் அளவு குறித்து சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜனாதிபதிக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில், இன்று முதல் அனைத்து அரிசி ஆலைகளுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.