தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் திரிஷாவின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் இருக்கும் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் தான் நடிகை த்ரிஷா.
இவர், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளை மிக நேர்த்தியாக பேசத் தெரிந்த நடிகை. சென்னை பிறப்பிடமாக கொண்ட த்ரிஷா கிருஷ்ணன் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் களமிறங்கி விட்டார்.
கடந்த 1999ம் ஆண்டு “Miss Chennai” ஆக இருந்த த்ரிஷா, பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான “ஜோடி” படத்தின மூலம் சினிமாவிற்குள் என்றி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவர் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான சூர்யாவின் “மௌனம் பேசியதே” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மாறிவிட்டார்.
சினிமாவிற்கு வந்த பின்னர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று நடிக்கும் ஆற்றல் த்ரிஷாவிற்கு உண்டு, இதனால் அடுத்தடுத்து “மனசெல்லாம்”, “சாமி”, “லேசா லேசா”, “அலை” மற்றும் “எனக்கு 20 உனக்கு 18” ஆகிய படங்களை தன்வசப்படுத்திக் கொண்டார்.
இதற்கிடையில் தெலுங்கு திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைக்க, தற்போது பாலிவுட் வரை பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். தற்போது சினிமா, சமூக வலைத்தளங்கள் என இரண்டிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சொத்து மதிப்பு விவரங்கள்
இந்த நிலையில், தற்போது த்ரிஷாவிற்கு 41 வயதானாலும் டாப் நடிகைகளில் ஒருவராக பிசியான நாயகியாக வலம் வருகிறார்.
இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.12 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். இவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் ஐதராபாத்தில் சொகுசு பங்களாக்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் பிஎம்டபிள்யூ 8 மற்றும் 5 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், ரேஞ்சு ரோவர் எவோக் உள்ளிட்ட சொகுசு கார்கள் உள்ளன. மொத்தமாக த்ரிஷாவிடம் 100 முதல் 110 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
சினிமா மட்டுமின்றி விளம்பரங்களில் நடித்தும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.