அண்ணாமலையிடம் ரோகினி மாட்டிக் கொள்வாரா?

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி தனது மகன் க்ரிஷை சேர்த்த பள்ளியில் அண்ணாமலையும் வேலைக்கு சேர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

ரோகினியின் சதியினால் கஷ்டத்தை அனுபவித்த முத்து மற்றும் மீனா இருவரும் தற்போது அதிலிருந்து மீண்டு வந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ரோகினி நாளுக்கு நாள் அதிகமான தவறுகள் செய்துவரும் நிலையில், இவர் எப்பொழுது மாட்டிக் கொள்வார் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் அண்ணாமலை வேலைக்கு செல்கின்றார். அதுவும் க்ரிஷ் படிக்கும் பள்ளியில் தான் அவருக்கு வேலைக்கு சேர்ந்துள்ள நிலையில், இதனை அறியாத ரோகினி க்ரிஷை அழைத்து வந்துள்ளார்.

கடைசியில் அண்ணாமலை முத்து இருவரும் எதிரே நின்ற நிலையில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக பதுங்கி இருக்கின்றார்.