யாழில் பேரனின் பகிடியால் மூதாட்டி பலி!

யாழ்ப்பாணம் – கொக்குவிலில் பேரன் பகிடியாக தள்ளிவிட்டதில் 91 வயதான மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொக்குவில் பகுதியில் 21 வயதான பேரன் பகிடியாக தள்ளிவிட்டதில் மூதாட்டி நிலைகுலைந்து கீழே விழுந்து உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்திருப்பதாக தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.