யாழ்ப்பாணம்(Jaffna) வட்டுக்கோட்டை மூளாய் – வேரம் பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(8) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
24 வயதுடைய இளைஞர் ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர் ஒருவர் கைது
குறித்த நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.