ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷ்.

நடிகர் தனுஷ் தற்போது படங்கள் நடிப்பது மட்டுமின்றி இயக்குவதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ராயன் வெற்றிக்கு பிறகு அவர் இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கி வருகிறார்.

அது மட்டுமின்றி குபேரா என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.

ஹாலிவுட் படத்தில் தனுஷ்?

ஏற்கனவே தனுஷ் The Gray Man என்ற ஹாலிவுட் படத்தில் சில வருடங்களுக்கு முன்பு நடித்து இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் ஒரு ஹாலிவுட் ப்ராஜெக்ட்டில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதில் அவருக்கு ஜோடியாக நடிகை சிட்னி ஸ்வீனி நடிக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.