இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கென தனி மார்கெட் இன்னும் உருவாகவில்லை. ஆனாலும் சமீபகாலமாக நல்ல கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் முதல் முறையாக சாந்தனு மலையாள படம் ஒன்றில் நடிக்கின்றார். உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் மலையாள நடிகர் ஷானே நிகம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருடன் இணைந்து சாந்தனு மற்றும் அயோத்தி பட நடிகை பிரீத்தி அன்சு அன்சாரி நடிக்கின்றனர் என இன்று பூஜை நிகழ்வுடன் அறிவித்துள்ளனர்.