ரஜினியின் ஜெயிலர் 2 ரிலீஸ் அப்டேட் .

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.

உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த ஜெயிலர் படம், தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக கருதப்படுகிறது.

அடுத்து ஜெயிலர் 2 படம் குறித்து எப்போது அறிவிப்பு வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், ஜெயிலர் படத்தை குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிரடி கண்டிஷன்
அதாவது, சன் பிக்சர்ஸ், ஜெயிலர் 2 படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண வேண்டும் என்று முடிவு பண்ணி வைத்திருந்தது.

ஆனால்,நெல்சன் ஜெயிலர் 2 படத்தை எடுப்பதற்கு குறைந்தது 13 மாதமாவது டைம் வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு தான் ஜெயிலர் 2 படம் வெளியாகும் என கூறப்படுகிறது.