வெள்ளைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் மூலிகை எண்ணெய்

பொதுவாக முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.

இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் மூலிகை எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய்- 3 லிட்டர்
பொன்னாங்கண்ணி கீரை- 1 கைப்பிடி
கறிவேப்பிலை- 1 கைப்பிடி
வேப்பிலை- 1 கைப்பிடி
அவுரி இலை- 1 கைப்பிடி
கரிசிலாங்கண்ணி- 1 கைப்பிடி
மருதாணி- 1 கைப்பிடி
ரோஜா இதழ்- 1 கைப்பிடி
செம்பருத்தி பூ- 1 கைப்பிடி
நெல்லிக்காய்- ½ kg
சின்ன வெங்காயம்- ½ kg
வெந்தயம்- 50g
கருஞ்சீரகம்- 50g
ஆவாரம்பூ- 1 கைப்பிடி
தயாரிக்கும் முறை

முதலில் மேலே உள்ள அனைத்து இலைகளையும் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு மிக்ஸி ஜாரில் அவுரி இலை, கரிசலாங்கண்ணி இலை, பொன்னாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, மருதாணி, வேப்பிலை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அதன் பிறகு வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் மிக்ஸியில் சின்ன வெங்காயம் மற்றும் நெல்லிக்காய் சேர்த்து அரைத்து அதன் சாறை மற்றும் துணியில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

இதனை தொடர்ந்து காயவைத்த ரோஜா இதழ், செம்பருத்தி பூ மற்றும் ஆவாரம்பூ சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் அடுப்பில் ஒரு இரும்பு வாணலை வைத்து அதில் பாதி தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம், நெல்லிக்காய் சாறை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

நிறம் மாறி பொன்னிறமாக வந்ததும் இதில் அரைத்து வைத்த இலைகளை சேர்த்து கொதிக்கவிடவும்.

அதன் பின் அரைத்து வைத்திருந்தக வெந்தயம், கருஞ்சீரக பொடி மற்றும் ரோஜா இதழ், செம்பருத்தி பூ, ஆவம்பூ அரைத்த பொடியை சேர்த்து கலந்துவிடவும்.

பின் வெட்டிவேரும் சேர்த்து நன்கு கலந்து இதில் மீதமுள்ள தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பை அனைத்து ஒரு இரவு முழுக்க அப்படியே வைக்கவும்.

இறுதியாக இதனை வடிகட்டி தலைமுடிக்கு தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி கருப்பாக மாறும்.