சிரிய ஜனாதிபதிக்கு ரஷ்யாவிலும் ஆபத்து?

கிளர்ச்சியாளர்களுக்குத் தப்பி சிரிய ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்திருந்தாலும், அங்கும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்கிறார் பிரித்தானிய நிபுணர் ஒருவர்.

உணவில் விஷம் வைக்கப்படலாம்
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்குத் தப்பி, சிரிய ஜனாதிபதியான பஷார் அல் அசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்திருந்தாலும், அங்கும் அவர் உயிர் பயத்துடன் தான் வாழவேண்டியிருக்கும் என்கிறார் அரசியல் நிபுணரான பேராசிரியர் அந்தோனி க்லீஸ்.

அசாத் உயிரோடிருக்கும்வரை அவர் இரண்டு முக்கியமான விடயங்களை உலகுக்கு நினைவூட்டிக்கொண்டே இருப்பார்.

ஒன்று, அவர் ஒரு மோசமான ராட்சதன், ஆனால், அவருக்கு ரஷ்யா தன்னாலான ஆதரவை அளிக்கிறது.

இரண்டு, ட்ரம்ப் பதவிக்கு வருவது குறித்த கவலை புடினுக்கும் உள்ளது. அசாதின் பதவியை தக்கவைத்துக்கொள்ள உதவ புடினால் முடியவில்லை. அது அவரது பலவீனமாக கருதப்படுகிறது.

மேலும், மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமியவாதிகளானாலும் சரி, அல்லது அவரை தவறான நபரின் பக்கம் நிற்பவராக கருதுபவர்களானாலும் சரி, அசாத் ரஷ்யாவில் தலைமறைவாக இருக்கும் ஒரு தலைவராக இருப்பதால், அவரை அவர்கள் பிரச்சினையாகவே பார்ப்பார்கள்.

ஆக, ரஷ்யாவிலிருக்கும் அசாத் ஜன்னல் ஓரமாக நிற்பதை தவிர்ப்பது நல்லது. அத்துடன், தனக்கு வழங்கப்படும் தேநீரையும் உணவையும், அவற்றில் விஷம் வைக்கப்பட்டுள்ளதா என பரிசோதித்தபின் உட்கொள்வது அவருக்கு நல்லது என்கிறார் பேராசிரியர் அந்தோனி.

அதாவது, ரஷ்யாவிலேயே அசாத் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கிறார் அவர்.