வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

இன்னும் 5 மாதங்களில் சில போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது என்று முக்கியமான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்
இன்று உலக அளவில் உள்ள மக்கள் மொபைல் போனில் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் இருக்கின்றது. தொழில் ரீதியாகவும், சொந்தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்பை, அதன் நிறுவனம் பயனர்களுக்கு உதவியாக பல மாற்றங்களை செய்து வருகின்றது. சில தருணங்களில் அதிர்ச்சி தகவலையும் கொடுத்து வருகின்றது.

அந்த வகையில், நாம் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் கணக்கானது சில வகையான போன்களில் இன்னும் 5 மாதத்திற்கு பின்பு செயல்படாது என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

எந்த போனுக்கு எடுக்காது?
குறிப்பாக, ஐபோன் 5s, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன்களில் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் வாட்ஸ்அப் நிறுத்தப்படும். ஆப்பிள் ஐபோன் iOS 15.1 க்கும் குறைவான பதிப்பைக் கொண்ட போன்களில் வாட்ஸ்அப் நிறுத்தப்படும்.

அந்த வகையில் ஐபோன் 5s, 6 மற்றும் 6 பிளஸ் போன்கள் iOS 12.5.7 பதிப்பை மட்டுமே கொண்டுள்ளன. இதுகுறித்து WAbetainfo கூறுகையில், தற்போது வாட்ஸ்அப் iOS 12 பதிப்பை ஆதரித்து வரும் நிலையில், புதிய மேம்படுத்துதலுடன் குறைந்தபட்சம் 15.1 பதிப்பு iOS மற்றும் நவீன பதிப்பு iOS ஐ ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஐபோன் 5s, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன்கள் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்த பழைய ஐபோன் பயனர்கள் தங்கள் போனை மாற்றுவது நல்லது.