அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜையும், வெளிநாட்டு பெண்ணொருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காக்கும் படையினர் வெளிநாட்டு ஜோடியை மீட்டு உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
இதன்போது உயிர் தப்பிய வெளிநாட்டவர் 29 வயதான ருமேனிய பிரஜை எனவும், பெண் 30 வயதான சீன பிரஜை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.