அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த புஷ்பா 2 படம் திரைக்கு வந்து 6 நாட்களில் ஆயிரம் கோடி வசூலை நெருங்கி உள்ளது. இந்த படத்தின் மூன்றாம் பாகத்திலும் அல்லு அர்ஜுன் நடிக்கப் போகிறார் என்றாலும், அந்த படம் உருவாக இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது. இந்த நிலையில் புஷ்பா -2 படத்தை அடுத்து திரிவிக்ரம் இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் அடுத்து நடிக்கப் போகிறார். இப்படம் குறித்த அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டு, வருகிற மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.