சொந்த பணத்தில் ஏழைகளை வாழவைக்கும் பாலா

பிரபல தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாலாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

KPY பாலா சொத்து மதிப்பு
KPY பாலா பிரபல டிவி நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். ஆனால் தற்போது மக்களால் கொண்டாடப்படும் நடிகராகவும் சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். இவர் தொகுப்பளாராக பணியாற்றி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

இவர் சின்ன வருமானத்தை பெற்று கொண்டாலும் அவருக்கு கிடைக்கும் பணத்தை வைத்து ஏழை மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறார். கஷ்டப்படும் பெண்களுக்கு ஆட்டோ, வாகன வசதி இல்லாத ஊருக்கு ஆம்புலன்ஸ், விவசாயிகளுக்கு உதவி என்று பல உதவிகளை செய்து வருகிறார்.

இவரை தற்போது ராகவா லாரன்ஸ் சினிமாவில் நடிக்க வைக்க உள்ளார். இந்த நிலையில் இவருடைய சொந்த பணத்தை தற்போது வரை மக்களுக்காக உதவி வருவதால் தனக்கென அவ்வளவு பெரிதளவில் எந்த சொத்தும் இல்லை.

மக்களின் சந்தோஷத்திற்கே அவருடைய சொத்தை செலவு செய்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் பாலாவின் சொத்து மதிப்பு 2 இல் இருந்து 5 கோடிகள் இருக்கும் என எதிபார்க்கப்பட்டுள்ளது.