மூன்றரை இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை பிரதேசத்தில் உள்ள நபரொருவரினால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண் கைதாகியுள்ளார்.
இடைத்தரகராக செயற்பட்ட பெண்
அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கண்டி போகம்பறை விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள வாகன தரிப்பிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, தலாத்துஓயா பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, கிரிமெட்டியவத்த பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றை விவசாயத்துக்காக பயன்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை காணி சீர்திருத்த ஆணைக்குழு ஊடாக மேற்கொள்ளவதற்கு இடைத்தரகராக செயற்பட்ட சந்தேக நபர், முறைப்பாட்டாளரிடம் மூன்றரை இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட பெண் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.