அசாத் சாலி கைது சட்டவிரோதமானது!

சாலி கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கு நட்ட ஈடாக 75,000 ரூபா பணத்தை பிரதிவாதிகள் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் இன்று (12.12.2024) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஆகியோர் இந்த வழக்கின் பிரதிவாதிகள் ஆவர்.

2021 மார்ச் 9 அன்று செய்தியாளர் சந்திப்பில் மதங்களுக்கு இடையே முருகலை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அசாத் சாலி 2021 மார்ச் 16 அன்று கைது செய்யப்பட்டார்.

ஒன்பது மாதங்களின் பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் 2021 டிசம்பர் 2 அன்று அவர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.