ரொறன்ரோவில் இனம் தெரியாத பாக்டீரியா தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பொதுச் சுகாதார நிறுவனம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சிகிலோ என்ற பாக்டீரியாவினால் ஏற்படக்கூடிய சிகிலோஸிஸ் என்ற நோய் தொற்று தாக்கம் பரவி வருவதாகவும், இது மருந்துகளுக்கு தாக்கு பிடிக்கக்கூடிய பாக்டீரியா எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நோய் மனிதனின் சமிபாட்டுத் தொகுதியை தாக்கக்கூடியது எனவும் இதனால் வயிற்று வலி வாந்தி பேதி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இந்த நோய் தாக்கத்தினால் 119 பேர் பாதிக்கப்பட்டனர் எனவும் இந்த ஆண்டில் இதுவரையில் 101 பேருக்கு இந்த நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.