உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் இன்றையதினம் (13-12-2024) மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
குறிப்பாக உக்ரைனின் மின்னுற்பத்தி கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி ஹெர்மன் ஹாலுஸ்சென்கோ தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் அதிநவீன டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (12-12-2024) நள்ளிரவு முதல் உக்ரைனின் வான்பரப்பில் பல்வேறு முறை ஏவுகணைகள் வீசப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
குறிப்பாக உக்ரைனின் மேற்கு பகுதிகளில் பாலிஸ்டிக் கின்ஸால்(Kinzhal) ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.