வெல்லவாய வீதி தடைப்பட்டுள்ளது!

மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக எல்ல – வெல்லவாய வீதி தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மின்விளக்கு கம்பம்

எல்ல – வெல்லவாய வீதியில் 10ஆம் கந்தலுக்கு அருகில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கரந்தகொல்லை வீதியில் எல்ல – வெல்லவாய வீதியில் மின்விளக்கு கம்பம் ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் ஒரு பாதை தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.