பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்தது தான், அந்த பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணம் என அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேற்று கைதானார். மேலும் தற்போது ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், சிறையில் இருந்து வெளிவந்துள்ளார்.
திரையில் வெற்றிநடை போட்டுவரும் புஷ்பா 2 படம் 9 நாட்கள் பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில் 9 நாட்களில் உலகளவில் புஷ்பா 2 திரைப்படம் ரூ. 1150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.