விஜய்க்கு அட்வைஸ் கூறிய சரத்குமார்

எந்தவொரு கருத்தையும் தெரிவிப்பதற்கு முன்பாக, சிந்தித்து பேச வேண்டும் என்று த.வெ.க., தலைவர் விஜய்க்கு பா.ஜ., நிர்வாகி சரத்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நடந்த பா.ஜ., நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விஜய் அரசியலுக்கு வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம், மகிழ்ச்சி என்று ஏற்கனவே தெரிவித்து விட்டேன். எல்லோருமே அரசியலுக்கு வரணும் என்று நினைப்பவன் நான். கடந்த கூட்டத்தில் பேசும் போது கூட, மும்மொழி கொள்கை, நீட் வேண்டாம் என்று விஜய் சொன்னார், அதற்கு பதில் அளித்து விட்டேன்.

இப்ப மணிப்பூர் பற்றி சொல்லியிருக்காரு. மணிப்பூரில் மெய்தி, குக்கி என்று இரு இன மக்கள் இருக்காங்க. அவர்களுக்குள் பல்லாண்டுகளாக பிரச்னை உள்ளது.

அதில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு, மக்கள் பாதிக்காத வகையில் சமரசத்தை கொண்டு வர முடியுமா? என்று பார்த்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனை இங்கு இப்படி பேசியிருக்க வேண்டாம். விஜய் கொஞ்சம் சிந்தித்து பேச வேண்டும். ஏனெனில் அவரது பயணம் நல்லா வரணும். கொஞ்சம் புரிந்து கொண்டு பேசுவது நல்லது, என சரத்குமார் கூறினார்.