பணம் சம்பாதிக்க கடினமாக உழைக்கிறோம். பல சமயங்களில் நம் வேலைக்கு நல்ல சம்பளமும் கிடைக்கிறது. இருப்பினும், சம்பாதித்த பணம் சில நேரங்களில் நம் கைகளில் நீடிப்பதில்லை. மாத இறுதியில் நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து கடன் பெறும் சூழல் உருவாகும். இதனால் ஒருவருடைய வாழ்வில் நஷ்டம் ஏற்படுகிறது. அதோடு சிக்கனமாக இருக்கும் சூழலும் அமைகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஜோதிடத்தில் சில தீர்வுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பணம் எப்போதும் உங்களுடன் இருக்கும்.
உங்கள் வீட்டின் பால்கனியிலோ அல்லது முற்றத்திலோ பாரிஜாத செடி(பவள மல்லி)யை நடும்போது அது வீட்டிற்குள் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, பாரிஜாத செடி இருக்கும் வீட்டில் லட்சுமியின் வாசனை இருக்கும். பாரிஜாத மலர் செடியை சரியான திசையில் நட்டால் பல வகையான பிரச்சனைகள் விலகும். பாரிஜாத செடியை வீட்டில் வைப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
பாரிஜாத மலர் லட்சுமி தேவிக்கு மிகவும் விருப்பமானது. இந்தப் பூவின் மணம் எங்கெங்கு இருக்கிறதோ, அங்கே லட்சுமி தேவி தங்குவதாக நம்பப்படுகிறது. எனவே பாரிஜாத செடியை வீட்டில் வைப்பதன் மூலம் ஒருவரின் பொருளாதார நிலை மேம்படும். அதோடு வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
பவள மல்லி அல்லது பாரிஜாத செடியை வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் நட்டால், வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்கும். இச்செடியின் பூவைப் பார்த்தவுடன் வாழ்வில் நிம்மதியும், மனதுக்கு மிகுந்த திருப்தியும் கிடைக்கும். அதோடு ஒருவர் வேலை தேடிக் கொண்டிருந்தாலோ அல்லது உத்தியோகத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டாலோ அல்லது தொழிலில் வெற்றி கிடைக்காவிட்டாலோ, 21 பாரிஜாத மலர்களை சிவப்புத் துணியில் கட்டி லட்சுமி தேவியின் முன் வைக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் எதிர்பார்த்த அனைத்தும் நடைபெறும்.
இவை தவிர பாரிஜாத செடியை வீட்டில் வைப்பதால் நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் கிடைக்கும். கடனில் இருந்து விடுபடலாம். மற்றொரு விதமாக, பாரிஜாதச் செடியின் ஒரு துண்டை மட்டும் எடுத்து சிவப்புத் துணியில் கட்டி லட்சுமி தேவியின் முன் வைத்து லட்சுமி தேவியையும், செடியின் துண்டையும் முறையான சடங்குகளுடன் வணங்கி, அந்தச் செடியில் மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய பின்னர், கனக்தாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் வீட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், ஜோதிடம், பஞ்சாங்கம், மத நூல்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இவை உண்மை என்பதற்கு எந்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே