ஆண்டின் இறுதியில் இடம்பெறவுள்ள சூரிய பெயர்ச்சியால் அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!

வியாழ பகவானின் ராசியில் சூரியன் வருவதால், சிம்மம் உள்ளிட்ட ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பது மட்டுமின்றி, அதிர்ஷ்டம் கூடும் வாய்ப்பும் உள்ளது. அவ்வாறு அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகளை தெரிந்துகொள்ளலாம்.’

ஆன்மா, மரியாதை, உயர் பதவி மற்றும் தலைமைத் திறன் ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படும் சூரிய பகவான் நவ கிரகங்களின் அதிபதியாக கருதப்படுகிறார். ஜாதகத்தில் சூரிய பகவானின் நிலை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியனின் நிலையைப் பொருத்து ஒருவரின் செல்வாக்கு, கலைத்திறன் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சூரியன் ஒரு மாத காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றுகிறார்.

ஜோதிட பஞ்சாங்கத்தின் படி, சூரியன் வரும் 15-ம் தேதி இரவு 09:56 மணிக்கு தனுசு ராசிக்குள் நுழைகிறது. இந்த இடப்பெயர்ச்சியானது தனு சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. வியாழ பகவானின் ராசியில் சூரியன் வருவதால், சிம்மம் உள்ளிட்ட ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பது மட்டுமின்றி, அதிர்ஷ்டம் கூடும் வாய்ப்பும் உள்ளது. அவ்வாறு அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகளை தெரிந்துகொள்ளலாம்.

மேஷம்: ஜோதிடக் கணக்கீடுகளின்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் நன்மை பயக்கும். சூரியன் மேஷ ராசியினரின் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் போன்றவற்றில் நிதி ஆதாயம் கிடைக்கும். இந்த நேரத்தில் முதலீடுகளிலிருந்து விரும்பிய லாபத்தையும் பெறுவார்கள். நம்பிக்கை அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வீடு, வாகனம், சொத்து அல்லது ஏதேனும் ஒரு பொருளை வாங்க நினைத்திருந்தால், அந்த ஆசை நிறைவேறும்.

விருச்சிகம்: சூரிய பகவானின் சஞ்சாரம் விருச்சிக ராசியினருக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். திருமண வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இது குடும்பத்தில் இனிமையான சூழ்நிலையை உருவாக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், ஜோதிடம், பஞ்சாங்கம், மத நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இவை உண்மை என்பதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.