சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி நடராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் கங்குவா. கடந்த மாதம் திரைக்கு வந்த இப்படம் எதிர்மறையான விமர்சனங்களால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கங்குவா படம் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்று வருவதாக கூறுகிறார்கள். குறிப்பாக இப்படம் ஒரு வாரத்தில் ஒரு பில்லியன் ஸ்ட்ரீமிங் மினிட்ஸ் பெற்று சாதனை செய்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.