சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்ட ஊசியினால் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (17) பிற்பகல் 6 மாணவிகளும் ஒரு மாணவனும் பெலிஹுல் ஓயா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சமனல வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பல்கலைக்கழக வைத்தியசாலையில் இரண்டு மாத காலாவதியான தடுப்பூசிகளை செலுத்தியதன் காரணமாகவே குறித்த மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது