துருக்கி நாட்டில் கள்ளச்சாராயம் அருந்தி ஒரே மாதத்தில் 37 பேர் பலி!

துருக்கி நாட்டில் கள்ளச்சாராயம் அருந்தி ஒரே மாதத்தில் 37 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கடந்த 1-11-2024 ஆம் திகதி முதல் கள்ளச்சாராயம் அருந்தி 37 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையில் அந்நாட்டு அரசாங்கம் இறங்கியுள்ளது.

இதன்படி, கடந்த 10 நாட்களில் கள்ளச்சாராயம் விற்றதாக 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 40 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.