77 நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு.. பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை.

77 நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு.. பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை… யாழில் பதிவாளர் நாயகம் விஜய சிங்க தெரிவிப்பு.
77 நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு ஒன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதவாளர் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் விஜயசிங்க தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பதிவாளர்களை சந்தித்து கலந்துரையாடிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் அமைச்சுடன் இணைந்து இலங்கைக்கு வெளியே வசிக்கின்ற 77 நாடுகளில் வசிக்கின்ற பிரதிகள் தங்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
நாங்கள் இரு வாரங்களுக்கு முன்பாக 7 நாடுகளோடு இணைந்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினோம் அது சாத்தியமாக அமைந்துள்ளது.
வெளிநாட்டில் இருப்பவர்களும் எங்களுடைய பிரஜைகள் என்ற அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
பதிவாளர் திணைக்களத்தின் பணிகள் பரந்துபட்டது.யாழ்பாணத்தில் பெண் பதிவாளர்கள் அதிகமாக இருப்பதால் எமக்கு வேலை செய்வது இலகுவாக அமைந்துள்ளது.
ஏனெனில் பிறப்பு இறப்பு திருமண விடயங்களில் பெண்களின் கவனம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்களினுடயை சேவையை மேம்படுத்த முடியும்.
மேலும் யாழ் மாவட்டத்திலிருந்து நமக்கு கிடைக்கப் பெறுகின்ற பிறப்பு இறப்பு சான்றிதழ் படிவங்கள் எழுத்துக்கள் தெளிவாகவும் வடிவானதாகவும் பிழையின்றியும் காணப்படுகின்றது.
இதை நான் என்னை கௌரவித்ததுக்காக கூறவில்லை பெருமையுடன் கூறுகிறேன் யாழ்ப்பாணத்தில் சேவையாற்றுபவர்கள் தமது பணியை சிறப்பாக செய்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.