கனடாவின் பீல் பிராந்தியத்தில் அதிகளவு சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிராந்தியத்தில் ஒவ்வொரு 36 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவையும் ஆயுதமொன்று மீட்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் இதுவரையில் 205 சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரையில் ஒரு ஆண்டில் கைப்பற்றப்பட்ட அதிகளவான சட்டவிரோத ஆயுதங்கள் இந்த ஆண்டில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் சுமார் 60 ஆயுதங்கள் கூடுதலாக கைப்பற்றப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா தெரிவித்துள்ளார்.
பீல் பிராந்தியத்தில் இந்த ஆண்டில் சுமார் 147 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இது கடந்த ஆண்டை விடவும் 70 வீத அதிகரிப்பு எனவும் தெரிவித்துள்ளார்.