புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பிலான முடிவு விரைவில்…

புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்ததையடுத்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தக்கோரி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் சமர்ப்பித்த அடிப்படை மனித உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று (18) உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த மனுக்கள் தொடர்பான முடிவு எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கப்படும் என உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது.

யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.