தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள்!

பல்வேறு குற்றச்செயல்கள் காரணமாக இந்த ஆண்டில் மட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் நீதிமன்றங்களினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாகன விபத்து, அலட்சியமாக வாகனம் செலுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 3 ஆயிரத்து முன்னூறு சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இதற்கிடையே, கடந்த காலங்களை விடவும் இந்த ஆண்டில் கூடுதலான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், நகர்ப் பகுதிகளில் கூடுதலான வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.