பிக்பாஸ் வீட்டிலிந்து பணப் பெட்டியுடன் வெளியேறப் போவர் யார் தெரியுமா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் பணப்பெட்டி வந்ததும் எடுத்துக்கொண்டு வெளியேறும் முடிவில் உள்ள போட்டியாளர் ஒருவரை பற்றி பார்க்கலாம்.

பிக் பாஸ் மணி டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் தற்போது 73 நாட்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது தீபக், முத்துக்குமரன், விஜே

விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, ரஞ்சித், ராணவ், ரயான், செளந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, மஞ்சரி ஆகிய 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

இதில் ஒருவர் வெற்றி மகுடம் சூட காத்துக்கொண்டு இருக்கின்றனர்.கடந்த வாரங்களை போல இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் நடைபெற உள்ளது. இதில் தற்போது மணி டாஸ்க் நடைபெற உள்ளது.

இந்த மணி டாஸ்க்கில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுபவர்கள் வெளியேறலாம். கடந்த சீசன்களில் கவின், கேப்ரியல்லா, அமுதவாணன், சிபி, பூர்ணிமா ஆகியோர் மட்டுமே மணி டாஸ்கில் வெளியேறி உள்ளனர்.

இதில் அதிக தொகையுடன் வெளியேறி சென்றவர் பூர்ணிமா ஆவார். ஆரம்பத்தில் பிக் பாஸில் ஆரம்பத்தில் நன்றாக விளையாடி நல்ல பெயரை வாங்கிய ஜெப்ரி தான்.

ஆனால் கடந்த சில வாரங்களாக வீக் எண்ட் எபிசோடில் தன் பெயர் டேமேஜ் ஆனதை உணர்ந்துகொண்ட ஜெஃப்ரி, சில தினங்களுக்கு முன் ரஞ்சித்திடம் மணி டாஸ்க் எப்போ வரும் என கேட்டார்.

அதற்கு அவர் 12 அல்லது 14வது வாரத்தில் வரும் என கூறியிருந்தார்.இதன்மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் மணி டாஸ்கில் பணப்பெட்டியோடு வெளியே செல்ல உள்ள போட்டியாளர் ஜெஃப்ரி என தகவல் வெளியாகி உள்ளது.